திருமால் கண்ணனாகப் பிறந்தது     

233தேவரெலாங் குறையிரப்பத் தேவகிதன்
   திரிவயிற்றில் வசுதே வற்கு
மூவுலகுந் தொழநெடுமால் முன்னொருநாள்
  அவதாரஞ் செய்த பின்னை.

     (பொ-நி.) நெடுமால்  முன்  ஒருநாள்   தேவர் குறையிரப்ப, தேவகி
திருவயிற்றில், அவதாரம் செய்தபின்னை; (எ-று.)

      (வி-ம்.) அவதாரம்-பிறத்தல். குறை இரத்தல்-குறை சொல்லி இரத்தல் என்க                                                       (2)