கண்ணன் குலோத்துங்கனாகப் பிறந்தது | 234 | இருள்முழுது மகற்றும்விது குலத்தோன் தேவி | | | இகல்விளங்கு தபனகுலத் திராச ராசன் அருள் திருவின் திருவயிற்றில் வந்து தோன்றி ஆலிலையி னவதரித்தா னவனே மீள. | (பொ-நி.) அவனே, மீள, விதுகுலத்தோன் தேவி, இராசராசன் அருள்திருவின் வயிற்றில் வந்து தோன்றி; (எ-று.) (வி-ம்.) விது - திங்கள். விதுகுலம்- சளுக்கர்குலம். விதுகுலத்தோன்; இராசராசேந்திரன். விதுகுலத்தோன் தேவி: அம்மங்கை, இகல் - வெற்றி. தபனன்-ஞாயிறு. தபனகுலம், சோழர்குலம். இராசராசன் இராசேந்திரனாகிய கங்கைகொண்ட சோழன். இராசராசன் அருள்திரு -அம்மங்கை. ஆலிலையில் அவதரித்தான்; கண்ணன், மீள-மீண்டும். (3) |