குலோத்துங்கன் பிறந்த சிறப்பு

235வந்தருளி அவதாரஞ் செய்தலுநம்
   மண்ணுலகும் மறைகள் நான்கும்
அந்தரநீங் கினஎன்ன அந்தரதுந்
  துமிமுழங்கி யெழுந்த தாங்கே.

     (பொ-நி.) அவதாரம்  செய்தலும்,  அந்தரம்  நீங்கின என்ன அந்தர துந்துமி எழுந்தது; (எ-று.)

     (வி-ம்.)  அந்தரம்-கேடு; தேவருலகம். துந்துமி - பேரிகை, முழங்கி-ஒலித்து.                                                     (4)