குலோத்துங்கனைப் பாட்டியார் கண்டு மகிழ்ந்தது      

236அலர்மழைபோல் மழைபொழிய அதுகண்டு
   கங்கைகொண்ட சோழன் தேவி
குலமகள்தன் குலமகனைக் கோகனத
  மலர்க்கையான் எடுத்துக் கொண்டே.

     (பொ-நி.) மழை பொழிய; அதுகண்டு, தேவி, குல மகனைக்  கையால்
எடுத்துக் கொண்டு; (எ-று.)

      (வி-ம்.) அலர் -  மலர். தேவி - மனைவி. குலமகள் -  தன்  சிறந்த
மகள்(அம்மங்கை.) கோகனதம் -தாமரை.