பாட்டியார் மொழிந்தது     

237அவனிபர்க்குப் புரந்தரனு அடையாளம்
   அவயவத்தின் அடைவே நோக்கி
இவனெமக்கு மகனாகி இரவிகுலம்
  பாரிக்கத் தகுவன் என்றே.

     (பொ-நி.)    அடையாளம்   நோக்கி,    "மகனாகி    இரவிகுலம்
பாரிக்கத்தகுவன்"  என்று. (எ-று.)

     (வி-ம்.) அவனிபர் - அரசர், புரந்தரன் - இந்திரன், அடைவு-வரிசை.
எமக்கு-சோழ குலத்தினராகிய எமக்கு. இரவி -ஞாயிறு. பாரித்தல்-வளர்த்தல்.
                                                           (6)