இருகுலத்தோரும் மகிழ்ந்தது 238 | திங்களினி ளங்குழவி செம்மலிவ னென்றுஞ் | | செய்யபரி திக்குழவி ஐயனிவ னென்றுந் தங்களின்ம கிழ்ந்திருகு லத்தரசர் தாமுந் தனித்தனி உவப்பதொர் தவப்பயனு மொத்தே. |
(பொ-நி.) இருகுலத்தரசரும் திங்களின் இளங்குழவி என்றும், பரிதிக்குழவி என்றும் மகிழ்ந்து உவப்பதோர் தவப் பயன் ஒத்து; (எ-று.) (வி-ம்.) இருகுலம்; தாய்தந்தையர் குலம்.தங்களின் மகிழ்ந்து -தமக்குள் களிப்புற்று. தவப்பயனுக் கேற்பவே புதல்வர் பிறத்தலால்,அத் தவப்பயனையே உவமை கூறினார். (7) |