ஐம்படைத்தாலி அணிந்தமை     

239பண்டுவசு தேவன்மக னாகிநில மாதின்
   படர்களையும் மாயனிவ னென்றுதெளி வெய்தத்
தண்டுதனு வாள்பணிலம் நேமியெனு நாமத்
  தன்படைக ளானதிரு ஐம்படைத ரித்தே.

    (பொ-நி.)  மாயன்  இவன்  என்று  தெளிவெய்த,  ஐம்படைதரித்து;
(எ-று.)

    (வி-ம்.) நிலமாது - மண்மகள். படர் - துன்பம். மாயன் - (திருமால்)
கண்ணன். தண்டு -  தடி.  தனு  - வில்.  வாள் -  வாட்படை.  பணிலம் -
சங்கு. நேமி - சக்கரம். தன் - திருமாலின். ஐம்படை -  ஐம்படைத்தாலி. (8)