கனவுநிலை கூறி விளித்தது 24. | கூடிய இன்கன வதனிலே | | கொடைநர துங்கனொடு அணைவுறாது ஊடிய நெஞ்சினொடு ஊடுவீர் உமது நெடுங்கடை திறமினோ. |
(பொ-நி.) கனவதனிலே, அணைவுறாது, ஊடிய நெஞ்சினொடு ஊடுவீர் திறமின்; (எ-று)
(வி-ம்.) கூடிய - வந்தடைந்த. நரதுங்கன் - குலோத்துங்கன். அணைவுறாது - தழுவிப்புணராது. ஊடிய - பிணங்கிய. நெஞ்சு - மனம். கனவிற் கண்ட குலோத்துங்கனைப் புணராது விட்ட நெஞ்சினை நொந்தன ரென்க. (4) |