மழலை மொழிந்தது     

241.தாயர்தரு பால்முலை சுரக்கவரு நாளே
    தானுமுல கத்தவர் தமக்கருள் சுரந்தே
தூயமனு வுஞ்சுருதி யும்பொருள் விளங்கிச்
  சொற்கடெ ரியத்தனது சொற்கடெரி வித்தே.

     (பொ-நி.) முலை சுரக்கவருநாள், அருள் சுரந்து, மனுவும் சுருதியும் விளங்கித்தெரிய, சொற்கள் தெரிவித்து. (எ-று.)

     (வி-ம்.)  சுரக்க   வருநாள்  -  பாலருந்தும்   பருவம்,  சுருதி -
மறை,   மழலைப்பருவத்தே    மொழிந்த    சொற்களிலும்   மனுநூல், 
மறைநூல்  அரும்பொருள் தோன்றின என்க.                     (10)