பூணூல் அணிந்தமை 242. | திருமார்பின் மலர்மடந்தை திருக்கழுத்தின் | | மங்கலநா ணென்ன முந்நூற் பெருமார்பின் வந்தொளிரப் பிறப்பிரண்டா வதுபிறந்து சிறந்த பின்னர். | (பொ-நி.) மார்பின் மங்கல நாண் என்ன, முந்நூல் ஒளிர, இரண்டாவது பிறப்பும் பிறந்து சிறந்த பின்னர்; (எ-று.) (வி-ம்.) திரு - அழகு. மலர் மடந்தை - திருமகள். மங்கல நாண் - தாலிக்கயிறு. முந்நூல் - பூணூல். பூணூல் அணிந்த பின் இரண்டாவது பிறப்பாம் என்க. (11) |