மறை பயின்றமை

.243 போதங்கொள் மாணுருவாய்ப் புவியிரந்த
      அஞ்ஞான்று புகன்று சென்ற
வேதங்கள் நான்கினையும் வேதியர்பால்
     கேட்டருளி மீண்டு கற்றே.

     (பொ-நி.) மாண் உருவாய், புகன்று சென்ற வேதங்கள்நான்கினையும், கேட்டருளிக் கற்று, (எ-று.)

     (வி-ம்.) போதம் - அறிவு;  மாண்  உரு  - பிரமசாரி  உரு.  புவி
இரந்த - உலகை ஏற்று வாங்கிய.                              (12)