| யானையேற்றம் | 245. | ஈரிரும ருப்புடைய வாரணம் உகைத்தே | | | இந்திரனெ திர்ந்தவரை வென்றுவரு மேயான் ஓரிரும ருப்புடைய வாரணம் உகைத்தே ஒன்னலரை வெல்வனென அன்னதுப யின்றே. |
(பொ-நி.) "இந்திரன் வாரணம் - உகைத்து வென்றுவரும்யான் ்வாரணம்` உகைத்து வெல்வ" னெனப் பயின்று; (எ-று.)
(வி-ம்.) ஈர் இரு - இரண்டு இரண்டு; நான்கு. மருப்பு-தந்தம். வாரணம் - யானை. உகைத்து - ஏறிச் செலுத்தி. ஒன்னலர் - பகைவர். இந்திரனினும் ஏற்றமுடைமை குறித்தது. அன்னது - யானையேற்றம். (14) |