குதிரையேற்றம் 246. | இற்றைவரை யுஞ்செல வருக்கனொரு நாள்போல் | | ஏழ்பரியு கைத்திரு ளகற்றிவரு மேயான் ஒற்றைவய மானடவி இத்தரைவ ளாகத்து உற்றவிருள் தீர்ப்பனென மற்றதுப யின்றே. |
(பொ-நி.) "அருக்கன் ஏழ் பரி உகைத்து இருள் அகற்றிவரும். யான் ஒற்றைமா நடவி இருள் தீர்ப்பன்" என அது பயின்று; (எ-று.) (வி-ம்.) செலவு சுற்றிச் செல்லுதல், அருக்கன் - ஞாயிறு. பரி - குதிரை. வயம்-வெற்றி. மான்- குதிரை. நடவி-நடத்திச் செலுத்தி. வளாகம் - பரந்த இடம். இருள்-துன்ப இருள். பயின்று-கற்று. (15) |