படைக்கலப் பயிற்சி 247. | சக்கரமு தற்படையொ ரைந்துமுத னாளே | | தன்னுடைய ஆனவத னாலவை நமக்குத் திக்குவிச யத்தின்வரு மென்றவை பயிற்றிச் செங்கைமலர் நொந்தில சுமந்தில தனக்கே. |
(பொ-நி.) படை ஐந்தும் தன்னுடைய ஆன அதனால் வரும் என்று, செங்கைமலர் நொந்தில; சுமந்தில; (எ-று.) (வி-ம்.) படைஐந்து; தண்டு, வில், வாள், சங்கு, சக்கரம், திருமாலே குலோத்துங்கனாதலின், "தன்னுடைய" வாயின. திக்கு விசயம்- திசைதோறும் சென்று தன் ஆற்றலை உணர்த்தல். நொந்தில - வருந்தலில்லை. சுமந்தில -கைக்கொள்ள வில்லை. (16) |