கலைநூற் பயிற்சி 248. | உரைசெய்பல கல்விகளின்உரிமைபல | | சொல்லுவதென் உவமையுரை செய்யின் உலகத்து அரசருள ரல்லரென அவைபுகழ மல்குகலை அவையவைகள் வல்ல பிறகே. | (பொ-நி.) கல்விகளின் உரிமை சொல்லுவதென் உவமை உரைசெய்யின், அரசர் உளரல்லர் என அவைபுகழ, கலை வல்ல பிறகு; (எ-று.) (வி-ம்.) உரைசெய் - மேம்பாடாகச் சொல்லப்படுகின்ற, வினைத்தொகை. உரிமை-குலோத்துங்கனுக்கு உரிமையாந் தன்மை. உவமை உரை - ஒப்புரைத்தல். அவை - சபை. அவை அவைகள் -அவ்வவற்றிலும், வல்ல-வல்லமைகொண்ட. (17) |