இளவரசானமை 249. | இசையுடனெ டுத்தகொடி அபயனவ | | னிக்கிவனை இளவரசில் வைத்த பிறகே திசையரச ருக்குரிய திருவினை முகப்பதொரு திருவுளம டுத்தருளியே. | (பொ-நி.) அபயன் இளவரசில் வைத்த பிறகு, திருவினை முகப்பதொரு திரு உளம் அடுத்தருளி; (எ-று.) (வி-ம்.) இசை - புகழ். அபயன்: இராசேந்திர சோழன் மகனான வீரராசேந்திரன். அவனி-உலகு. இள அரசு -இளவரசுப் பட்டம். திரு-செல்வம். முகத்தல் - கொள்ளை கொள்ளுதல். திரு உளம் - உயர் எண்ணம். அடுத்து அருளி - உண்டாகி. (18) |