போர்மேற் சென்றமை

250. வளர்வதொர் பதத்தினிடை மதகரி
      முகத்தினிடை வளையுகிர் மடுத்து விளையாடு இளவரியெ னப்பகைஞர் எதிர்முனைக       
     ளைக்கிழிய எறிபடை பிடித்த ருளியே.

     (பொ-நி.)  மதகரி   முகத்தினிடை   விளையாடு   இள  அரிஎன,
முனைகளைக் கிழிய, எறிபடை பிடித்தருளி ;(எ-று.)

     (வி-ம்.)  வளர்வதொர்  பதம் -வளரும் இளம்பருவம்.  கரி-யானை.
உகிர்-நகம். இள அரி-சிங்கக்குட்டி, முனை - போர்முனை. கிழிய - அழிய.
எறிதல் - சொல்லுதல்.  முனைகளை  எறிபடை ;  கிழிய  எறிபடை  என
இயைக்க, படை -போர்க்கருவி.                                (19)