வடவரசரை வெற்றிகொண்டது

251.குடதிசை புகக்கடவு குரகதர
      தந்திரவி குறுகலும் எறிக்கு மிருள்போல்
வடதிசை முகத்தரசர் வருகதமு
     கத்தனது குரகதம் உகைத்த ருளியே.

     (பொ-நி.)  இரவி  குறுகலும்   எறிக்கும்  இருள்  போல்,  அரசர்
வருகதம் உக. தனது குரகதம் உகைத்தருளி; (எ-று.)

     (வி-ம்.)  குடதிசை - மேல்திசை.  கடவுதல் -செலுத்தல்.  குரகதம்-
குதிரை.ரதம்-தேர்,  இரவி-ஞாயிறு  குறுகலும்-கீழ்த்திசையை அணைதலும். எறிக்கும் - அழிக்கப்படும். வடதிசைமுகம் - வடக்குத் திக்கினிடம். கதம்-
வெகுளி.   மேல்திசை   நோக்கிய    ஞாயிறுகண்டழியும்   இருள்போல்,
வடதிசை நோக்கிய குலோத்துங்கனைக் கண்டழிந்தனர் வடவர் என்க.
                                                        (20)