வயிராகரம் எரிமடுத்தது

252.புரமெரிம டுத்தபொழுது அதுவிது
      வெனத்திகிரி புகையெரிகு விப்ப வயிரா
கரமெரிம டுத்தரசர் கரமெதிர்
     குவிப்பதொரு கடவரைத னைக்க டவியே,
 
  
    
(பொ-நி.)  புகை  எரி  குவிப்ப,  வயிராகரம்  எரிமடுத்து.  அரசர்
கரம் குவிப்பதொரு கடவரை  தனைக்  கடவியே; (எ-று.)

     (வி-ம்.)  புரம் - திரிபுரம். அது  இது என -அது ஒப்பது இது என.
திகிரி - வட்டவடிவமான. வயிராகரம்; அது ஒப்பது. கரம் எதிர் குவித்தல்-
கைகுவித்து வணங்கல். கடவரை-யானை.                        (21)