களங்கொண்டது 253. | குளமுதிர மெத்தியதொர் குரைகடல் | | கடுப்பஎதிர் குறுகலர்கள் விட்ட குதிரைத் தளமுதிர வெட்டி ஒரு செருமுதிர ஒட்டினர்கள் தலைமலைகு வித்த ருளியே. |
(பொ-நி.) கடல்கடுப்ப, குதிரைத்தளம் வெட்டி, தலைமலை குவித்தருளி; (எ-று.) (வி-ம்.) குளம் - குளத்தின் நீர். முதிர - அழிய. மெத்துதல் - நிரம்புதல். குரைகடல் - ஒலியுடைய கடல். கடுப்ப-ஒப்பாக. குறுகலர்கள் - பகை மன்னர்கள். தளம் - படை. செருமுதிர - போர்மிக்கு. குளத்தை அழித்துக் கடல் தன்னகப்படுத்தல் போல். குலோத்துங்கன் படை, பகையரசர் படையை யழித்துக் களத்தைத் தன் கைப்படுத்திற் றென்க. (22) |