சக்கரக் கோட்டம் அழித்தமை 254. | மனுக்கோட்டம் அழித்தபிரான் | | வளவர்பிரான் திருப்புருவத் தனுக்கோட்ட நமன்கோட்டம் பட்டதுசக் கரக்கோட்டம். |
(பொ-நி.) வளவர் பிரான் புருவத்தனுக்கோட்ட, சக்கரக்கோட்டம், நமன்கோட்டம் பட்டது; (எ-று.) (வி-ம்.) மனு - மனிதர்கள். கோட்டம் - தீநெறி. புருவத்தனு- புருவ வில். கோட - வளைக்க. நமன்-யமன். சக்கரக்கோட்டம்-சக்கரக் கோட்டத்திலுள்ள பகைவீரர்கள்; இடவாகு பெயர். பட்டது-சேர்ந்தனர். (23) |