குலோத்துங்கன் விளக்கமும் பகைவர் அழிவும்

255. சரிக ளந்தொறுந் தங்கள்ச யமகள்
       தன்னை மன்னப யன்கைப் பிடித்தலும்
பரிக ளுங்களி றுந்தன ராசியும்
     பாரி போகங்கொ டுத்தனர் பார்த்திபர்.

     (பொ-நி.)  சயமகள்  தன்னை அபயன்கைப் பிடித்தலும், பார்த்திபர்
பாரி போகம் கொடுத்தனர் ; (எ-று.)

    
 (வி-ம்.)  சரிதல் -குலைந்து பின்னிடுதல். தங்கள்-பகையரசர் தங்கள்.
சய மகள்  -  வெற்றி   மகள்.   கைப்பிடித்தல்  -  திருமணம்   புரிதல்.
தனராசி - பொருட்குவியல். பாரி போகம்-சீதனம் (பாரி-மனைவி. போகம்-
இன்பநுகர்ச்சிப் பொருள்கள்)   தாம்   வளர்த்த  மகளைக்  கொடுத்தோர்
சீதனமும்  உடன் கொடுத்தனர் என்க.                         (24)