இதுவும் அது

256.பொருத ராதிபர் கண்கள் சிவந்தில
      போரி லோடிய கால்கள் சிவந்தன
விருத ராச பயங்கரன் செங்கையில்
     வேல்சி வந்தது கீர்த்தி வெளுத்ததே.

     (பொ-நி.)   பொருதராதிபர்    கண்கள்    சிவந்தில;   கால்கள்
சிவந்தன; செங்கையில்  வேல்சிவந்தது;  கீர்த்தி  வெளுத்தது;  (எ-று.)

     (வி-ம்.)   தராதிபர்  -  அரசர்.   போரில்   -   போர்க்களத்தில்.
விருதராசபயங்கரன்;  குலோத்துங்கன்,    வேல்சிவந்தது  -  பகைவரைக் கொன்றமையால்   வேல்  குருதிபடிந்து   செந்நிற    மேற்றது.   கீர்த்தி
வெளுத்தது என்றது, அதனால் அவன் பரந்த  புகழ்  களங்கமற்றதாதலால்
அதனை   வெண்மை   நிறமாகக்  கூறுதல்  சான்றோர் மரபு. ஆதலால், ‘வெளுத்தது ' என்றார்.                                     (25)