வீரராசேந்திரன் இறந்தமை

257.மாவுகைத் தொருதனி அபயன் இப்படி
      வடதிசை மேற்செல மன்னர் மன்னவன்
தேவருக் கரசனாய் விசும்பின் மேற்செலத்
     தென்றிசைக் குப்புகுந் தன்மை செப்புவாம்.

    (பொ-நி.)   அபயன் வடதிசைமேற்  செல,  மன்னர்  மன்னவன்
விசும்பின்  மேற்  செல,  தென்றிசைக்குப்   புகுந்தன்மை   செப்புவாம் ;
(எ-று.)

    (வி-ம்.)   மா - குதிரை. அபயன்  -  குலோத்துங்கன்.   மன்னர்
மன்னவன்   -   வீரராசேந்திரன்    (இராசேந்திரன் மகன்.)   விசும்பின்
மேற்செல  -  இறந்தான் என்றபடி. தென்திசை - சோழநாடு.
                                                        (26)