சோழநாடு அரசிழந்த இயல் 258. | மறையவர் வேள்வி குன்றி | | மனுநெறி யனைத்தும் மாறித் துறைகளோ ராறும் மாறிச் சுருதியும் முழக்கம் ஓய்ந்தே. |
(பொ-நி.) வேள்வி குன்றி, மனுநெறி மாறி, துறைகள் ஆறும் மாறி, சுருதியும் ஓய்ந்து. (எ-று.) (வி-ம்.) துறைகள் ஆறு - சிட்சை, கற்பம், வியாகரணம், நிருத்தம், சந்தோபிசிதம், சோதிடம், சுருதி-மறை. (27) |