கனவுநிலை கூறி வி்ளித்தது 26. | எனத டங்கஇனி வளவ துங்கனருள் | | எனம கிழ்ந்துஇரவு கனவிடைத் தனத டங்கள்மிசை நகந டந்தகுறி தடவு வீர்கடைகள் திறமினோ. | (பொ-நி) கனவிடை "வளவதுங்கன் அருள் அடங்க இனிஎனது" என மகிழ்ந்து நகம் நடந்த குறி தடவுவீர் திறமின். (எ-று)
(வி-ம்.) அடங்க-முழுதும். வளவதுங்கன்-குலோத்துங்கன், தனதடம் - கொங்கைத்தடம். நகம் நடந்த-நகத்தால் உண்டான. குறி-கீற்றுக் குறிகளை. தடவுதல்-கையால் தொட்டுத் தொட்டுப் பார்த்தல். தடவுதல் நனவில் என்க. கனவிடைக் கண்ட நகக்குறியை நனவிடை ஆராய்ந்தன ரென்க. இவ்வாறு தடவியதற்குக் காரணம் கனவுக்கும் நனவுக்கும் வேற்றுமை யறியாமை என்க. (6) |