இதுவும் அது 260. | ஒருவரை யொருவர் கைம்மிக்கு | | உம்பர்தங் கோயில் சோம்பி அரிவையர் கற்பின் மாறி அரண்களு மழிய ஆங்கே, | (பொ-நி.) ஒருவரை ஒருவர் கைம்மிக்குக் கோயில் சோம்பி, அரிவையர் கற்பின் மாறி, அரண்கள் அழிய ; (எ-று.) (வி-ம்.) கைம்மிகுதல் - கீழ்ப்படுத்து மேம்படல். உம்பர் - கடவுளர் சோம்புதல்: பூசையின்றி அவிந்துகிடத்தல்; அரிவையர் - பெண்கள். அரண்: அவ்வவர் நிற்றற்குரிய ஒழுக்கவரம்பு. (29) |
|
|