குலோத்துங்கன் மங்கலநீராடியது 263. | விரிபுனல் வேலை நான்கும் | | வேதங்கள் நான்கு மார்ப்பத் திரிபுவ னங்கள் வாழ்த்தத் திருஅபி டேகஞ் செய்தே, | (பொ-நி.)வேலை நான்கும் வேதங்கள் நான்கும் ஆர்ப்பப்புவனங்கள் வாழ்த்த அபிடேகம் செய்து, (எ-று.) (வி-ம்.) விரிபுனல் - நீர்ப்பரப்பு வேலை-கடல். திரு அபிடேகம்- மங்கல நீராட்டு. புவனம்-உலகம். ஆர்ப்ப-முழங்க. (32) |