மறையவர் முடிசூட்டியது 264. | அறைகழலரச ரப்பொழுது | | அடிமிசை யறுகெ டுத்திட மறையவர் முடியெ டுத்தனர் மனுநெறி தலையெ டுக்கவே. |
(பொ-நி.) அரசர் அறுகு எடுத்திட, மனு நெறி தலை எடுக்க, மறையவர் முடி எடுத்தனர், (எ-று.) (வி-ம்.) அறைகழல் - ஒலிக்கின்ற வீரகண்டை. அடிமிசை-கால்களின் மீது. அறுகு எடுத்திட - அறுகு இட்டு. வாழ்த்த. முடி: குலோத்துங்கனுக்குச் சூட்டும் முடி. தலை எடுக்க-மேலோங்க. (33) |