புலிக்கொடி எடுத்தமை

266.பொதுவற வுலகு கைக்கொடு
      புலிவளர் கொடியெ டுத்தன
அதுமுதற் கொடியெ டுத்தலும்
     அமரர்தம் விழவெ டுக்கவே.

     (பொ-நி.)
  புலிவளர்  கொடி   எடுத்தலும்,   அமரர்கள்   கொடி
எடுத்தன; (எ-று.)

     
(வி-ம்.)  பொது  அற - பொது   அன்றாகிக்   குலோத்துங்கற்கே
உரிமையாக.   கைகொடு   -  கைப்பற்றிக்கொண்டு.  அமரர்கள்  கொடி-
கடவுளர்க்கு விழாவின் பொருட்டு  எடுக்கும்  கொடி. (கோயிலுள் பூசையும்
விழாவும்  பொலியத் தொடங்கின என்க.)
                                                        (35)