கொற்றக்குடை கவித்தமை 267. | குவிகைகொ டரசர் சுற்றிய | | குரைகழல் அபயன் முத்தணி கவிகையின் நிலவெ றித்தது கலியெனு மிருளொ ளித்ததே. |
(பொ-நி.) அபயன் கவிகையின் நிலவு எறித்தது, கலிஎனும் இருள் ஒளித்தது; (எ-று.) (வி-ம்.) குவிகை - வணங்கிய கை. குரைத்தல் - ஒலித்தல். கவிகை - வெண்கொற்றக்குடை. நிலவு எறித்தது - ஒளி வீசியது. கலி- துன்பம். இருள் ஒளித்தது-இருட்டு நீங்கிற்று. (36) |