இதுவும் அது

268.அரனுறை யும்படி மலைகள்
      அடையவி ளங்கின அனையோன்
ஒருதனி வெண்குடை உலகில்
     ஒளிகொள் நலந்தரு நிழலில்.

     (பொ-நி.)  அனையோன்   வெண்குடை   ஒளிகொள்   நிழலில்,
மலைகள் அடைய, அரன் உறையும்படி விளங்கின, (எ-று.)

    
 (வி-ம்.)   அரன் - சிவன்.  உறையும்படி - இருக்குமாறு.  அடைய:
எல்லாம்  என்றபடி.   விளங்கின:   வெண்ணிறம்  பொருந்தி  (வெள்ளிக்
குன்றுபோல்)  விளங்கின  என்க.  அனையோன் -  அத்தன்மையோனான:
குலோத்துங்கன். ஒளி-வெள்ளொளி.
                                                       (37)