குலோத்துங்கன் புகழ் மேம்பாடு 269. | அரிதுயி லும்படி கடல்கள் | | அடையவி ளங்கின கவினின் ஒருகரு வெங்கலி கழுவி உலவுபெ ரும்புகழ் நிலவில். | (பொ-நி.) புகழ் நிலவில், கடல்கள் அடைய அரிதுயிலும்படி விளங்கின, (எ-று.) (வி-ம்.) அரி - திருமால். விளங்கின -பாற்கடல்போல் விளங்கின என்க. கவின் -அழகு. கவினின் விளங்கின என்க. ஒரு கரு - ஒப்பற்ற கருநிறமுள்ள. கலி - துன்பம். கழுவி உலவு; கழுவியதனால் உலவுகின்ற என்க. புகழ் நிலவு: புகழாகிய நிலவு. (38) |