ஊடல் உவகை நிலை கூறி விளித்தது 27. | முனிபவர் ஒத்திலராய் முறுவல்கி ளைத்தலுமே | | முகிழ்நகை பெற்றமெனா மகிழ்நர்ம ணித்துவர்வாய் கனிபவ ளத்தருகே வருதலும் முத்துதிரும் கயல்களி ரண்டுடையீர் கடைதிற மின்திறமின். |
(பொ-நி) முறுவல் கிளைத்தலும், மகிழ்நர்வாய் பவளத்தருகே வருதலும், முத்து உதிரும் கயல்கள் உடையீர் திறமின் (எ-று.)
(வி-ம்.) முனிபவரொத்து - ஊடல்கொண்டு. இலராய் பின் ஊடல் நீங்கியவராய். முறுவல்- புன்சிரிப்பு. கிளைத்தல்-தோன்றுதல்; உண்டாதல். முகிழ்நகை - புன்சிரிப்பு. மகிழ்நர் - கணவர். மணி - அழகு. துவர்வாய்- பவளம்போன்ற வாய். கனி - முதிர்ந்த; முற்றிய.பவளம்-பவளம்போன்ற வாய். வருதல் முத்தமிடற் கென்க. முத்து - முத்துப் போன்ற கண்ணீர். (மகிழ்ச்சிக் கண்ணீர் என்க) கயல்-மீன்போன்ற கண். ஊடல் நீங்கக் கண்டு தலைவன் முத்தமிடற்கு வர, அது கண்டு மகிழ்ச்சிக் கண்ணீர் உகுத்தாள் என்க. (7) |