இதுவும் அது

270.நிழலில டைந்தன திசைகள்
      நெறியில டைந்தன மறைகள்
கழலில டைந்தனர் உதியர்
     கடலில டைந்தனர் செழியர்.

     (பொ-நி.)  திசைகள்  நிழலில்  அடைந்தன;  மறைகள்  நெறியில்
அடைந்தன;   உதியர்    கழலில்   அடைந்தனர்;   செழியர்  கடலில் 
அடைந்தனர், (எ-று.)

     
(வி-ம்.)  நிழல் -  வெண்கொற்றக்குடையின்  நிழல்,  திசைகள் -
எல்லாப் பக்கங்களும். கழல்-பாதம். உதியர்-சேரர். கடலில் அடைந்தனர்-
கடல்  தீவுள் சென்று மறைந்து வாழ்ந்தனர். செழியர்-பாண்டியர்.
                                                      (39)