இதுவும் அது

271.கருணையொ டுந்தன துபய
      கரமுத வும் பொருள் மழையின்
அரணிய மந்திர வனல்கள்
     அவையுத வும்பெரு மழையே.

     (பொ-நி.)    தனது   உபயகரம்   உதவும்  பொருள்  மழையின்,
மந்திர அனல்கள் பெருமழை உதவும், (எ-று.)

     (வி-ம்.)   கருணையொடு  -  அருளோடு,  இரக்கமுடன்.  தனது:
குலோத்துங்கனது.   உபயம் - இரண்டு.   கரம் - கை. பொருள் மழை-
பொருளாகிய மழை. மழையின் - மழையைப்  போல, அரணி - தீக்கடை
கோல்.  அரணிய  அனல், மந்திர  அனல்  எனத்  தனித்தனி இயைக்க.
அரணிய  மந்திர  அனல்  - வேள்வித்தீ.  வேள்வியால்  மழை  வளம்
பெருகுமென்பது துணிவு.
                                                       (40)