இதுவும் அது 272. | பரிசில் சுமந்தன கவிகள் | | பகடுசு மந்தன திறைகள் அரசு சுமந்தன இறைகள் அவனி சுமந்தன புயமும். |
(பொ-நி.) கவிகள் பரிசில் சுமந்தன; திறைகள் பகடு சுமந்தன; அரசு இறைகள் சுமந்தன; புயம் அவனி சுமந்தன; (எ-று.) (வி-ம்.) பரிசில் - அன்புக்கொடை. கவி - புலவோர்; நாற்கவிகள். பகடு - எருது. திறை - பகையரசர் இடுவது. அரசு - சிற்றரசர். இறை- குலோத்துங்கன் கீழ் இருந்து அரசாள்வோர் அளிக்கும் இறைப்பொருள். அவனி - உலகம். புயம்- குலோத்துங்கன் தோள்கள். (41) |