இதுவும் அது

273.விரித்த வாளுகிர்வி ழித்த ழற்புலியை
      மீது வைக்கஇம யத்தினைத்
திரித்த கோலில்வளை வுண்டு நீதிபுரி
     செய்ய கோலில்வளை வில்லையே

     (பொ-நி.)    புலியை      வைக்க    இமயத்தினைத்    திரித்த
கோலில்வளைவுஉண்டு; நீதிபுரி கோலில் வளைவு இல்லை. (எ-று.)

     (வி-ம்.)  வாள்  -  ஒளி.   உகிர் - நகம்.  தழல்-நெருப்பு.  மீது-
இமயத்தின்மீது. கோல் - செண்டு. செய்ய கோல் - செங்கோல்.  வளைவு
இல்லை-கோட்டம் இல்லை.
                                                      (42)