இதுவும் அது

274.கதங்க ளிற்பொருதி றைஞ்சி டாவரசர்
      கால்க ளில்தளையு நூல்களின்
பதங்க ளில்தளையு மன்றி வேறொரு
     பதங்க ளில்தளைக ளில்லையே.

     (பொ-நி.)     இறைஞ்சிடா    அரசர்   கால்களில்    தளையும்,
பதங்களில்  தளையும்,   அன்றி,   வேறொரு   பதங்களில்    தளைகள்
இல்லை, (எ-று.)

     (வி-ம்.)  கதம் - சினம்.  பொருது - போர்செய்து.  இறைஞ்சுதல் -
வணங்குதல். அரசர் - பகையரசர். தளை - விலங்கு.  நூல்-செய்யுள் நூல்.
பதம் - சொல். தளை - வெண்டளை  முதலியன.  பதம் - இடம். தளை-
சிறைசெய்தல் முதலியன.                                   (43)