இதுவும் அது

277.கலையினொடும் கலைவாணர் கவியினொடும்
      இசையினொடும் காதல் மாதர்
முலையினொடும் மனுநீதி முறையினொடும்
     மறையினொடும் பொழுது போக்கி,
 
    (பொ-நி.)    கலையினொடும்,   கவியினொடும்    இசையினொடும்,
முலையினொடும், நீதி முறையினொடும்,  மறையினொடும்  பொழுதுபோக்கி,
(எ-று.)

     (வி-ம்.)  கலை - பல்கலை   நூல்கள்.  கலைவாணர் - கலைவல்ல
புலவர்கள். கவி-இனிய செய்யுட்கள். இசை-பண். முறை-நீதி.
                                                        (46)