குலோத்துங்கன் பரிவேட்டை யாடப் புறப்பட நினைந்தது

278.காலாற்றண் டலையுழக்கும் காவிரியின்
      கரைமருங்கு வேட்டை யாடிப்
பாலாற்றங் கரைமருங்கு பரிவேட்டை
     ஆடுதற்குப் பயண மென்றே,

     (பொ-நி.)  காவிரியின்  கரைமருங்கு  வேட்டையாடி,  பரிவேட்டை
ஆடுதற்குப் பயணம் என்று, (எ-று.)

     (வி-ம்.) கால்-வாய்க்கால். தண்டலை-சோலை. உழக்குதல்-கலக்குதல். பயணம்-புறப்படுதல்.   கரைமருங்கு - கரைப்பக்கம். பரிவேட்டை- குதிரை
மேற்கொண்டு வேட்டையாடல்.                               (47)