நால்வகைச் சேனைகளும் திரண்டமை | 279. | முரசறைகென் றருளுதலும் முழுதுலகும் | | | ஒருநகருட் புகுந்த தொப்பத் திரைசெய்கடல் ஒலியடங்கத் திசைநான்கின் படைநான்கும் திரண்ட ஆங்கே. |
(பொ-நி.) அருளுதலும், படைநான்கும், கடல் ஒலி அடங்க, முழுதுலகும் நகருட் புகுந்ததொப்ப, ஆங்கே திரண்ட, (எ-று.) (வி-ம்.) முரசு -பேரிகை. திரை-அலை. கடல் ஒலி அடங்கச் சேனை ஒலி மிகுந்ததென்க. நான்கின் - நான்கினின்றும். படை நான்கு -யானை குதிரை தேர் காலாள் என்னும் நால்வகைப்படை. அறைக - அடிக்க. திரண்ட-ஒன்று கூடின. (48) |