குலோத்துங்கன் புறப்பாடு

280.அழகின்மே லழகுபெற அணியனைத்தும்
      அணிந்தருளிக் கணித நூலிற்
பழகினார் தெரிந்துரைத்த பழுதறுநாட்
     பழுதற்ற பொழுதத்து ஆங்கே.

     (பொ-நி.)   அணி    அனைத்தும்   அணிந்தருளிக்,   கணிதநூல்
பழகினார் உரைத்த பழுதறுநாள் பழுதற்ற பொழுதத்து; (எ-று.)

    
 (வி-ம்.)  அழகின்மேல் -  இயற்கையான தன் உடலழகுக்கு மேலும்.
அணி  - அனைத்தும்  அழகுபெற அணிந்தருளி என இயைக்க, அணிகள்
அழகுபெற்று  விளங்குமாறு  அவற்றை அணிந்தான் என்க.  கணித நூல்-சோதிடநூல்.  பழுது அறுநாள்  - குற்றமற்ற  நல்ல  நாள்.  பொழுதத்து-
பொழுதின்கண்.                                          (49)