இதுவும் அது 281. | அனக தானமறை வாணர்பலர் நின்று பெறவே | | அபய தானம்அப யம்புகுது மன்னர் பெறவே கனக தானம்முறை நின்றுகவி வாணர் பெறவே கரட தானம்மத வாரணமு மன்றுபெறவே. |
(பொ-நி.) மறைவாணர் அனகதானம் பெற, மன்னர் அபயதானம் பெற. கவிவாணர் கனகதானம் பெற, வாரணம் கரடதானம் பெற; (எ-று.) (வி-ம்.) அகம்-பாவம்; அனகம்-பாவமற்றது. மறைவாணர் -அந்தணர். அபயதானம்-அஞ்சல் அளித்தல். அபயம்-அடைக்கலம். புகுது மன்னர்- அடைகின்ற வேந்தர்கள். தானம்-பொன்தானம். முறைநின்று-தகுதியாக. கரடதானம் - மதம்பாயும் இடம். மதவாரணம் - மதங்கொண்ட யானைகள். யானைகளிப்பு மிகுந்தன என்க. (50) |