யானை மேற்கொண்டது

282. மற்ற வெங்கட களிற்றின் உதயக்கி ரியின்மேல்  
       மதிக வித்திட உதித்திடும் அருக்க னெனவே
கொற்ற வெண்குடைக விப்பமிசைகொண்டு கவரிக்
     குலம திப்புடைக வித்தநில வொத்து வரவே.
 
    (பொ-நி.)    மதிகவித்திட     உதித்திடும்    அருக்கன்    என
குடைகவிப்ப, களிற்றின்மிசை கொண்டு, கவரி நிலவு ஒத்துவர. (எ-று.)

     (வி-ம்.)  கடம் - மதம். உதயக்கிரி-தோன்றும் மலை, மதிகவித்திட-
சந்திரன்   சூழ்ந்துகொண்டிருக்க.   அருக்கன்  -   ஞாயிறு.   களிற்றின்
மிசைகொண்டு  என இயைக்க.  கவரிக்குலம் -வெண்சாமரைக்   கூட்டம்.
மதிப்புடை-சந்திரனின் இருபக்கங்களினும். கவித்த-கவிந்துகொண்டிருக்கின்ற.
நிலவு - நிலாவொளி. வெண்கொற்றக்குடைநிலாவையும்,  வெண்சாமரைகள்
நிலவொளியையும் ஒத்தன என்க.                             (51)