பல்வகை இயங்களின் முழக்கொலி 283. | ஒருவ லம்புரி தழங்கொலி முழங்கி யெழவே | | உடன்மு ழங்குபணி லம்பல முழங்கி யெழவே பருவம் வந்துபல கொண்டல்கண் முழங்கி யெழவே பலவி தங்களொடு பல்லிய முழங்கி யெழவே. |
(பொ-நி.) வலம்புரி எழ, பணிலம்பல எழ, கொண்டல்கள் எழு (வதுபோல) பல்லியம் எழ; (எ-று.) (வி-ம்.) வலம்புரி - வலம்புரிச்சங்கு. தழங்கு ஒலி -ஒலிக்கும் ஓசை. பணிலம்-சங்கு. கொண்டல்-மேகம். எழவே-எழுதலையேபோல. பல் இயம் - பல்வகை இசைக்கருவிகள். பருவம் வந்து - கார்காலம் வர. கொண்டல் -மேகம். பலவிதங்களொடு முழங்கி என இயைக்க. (52) |