பிறபல ஒலி முழக்கம் 284. | மன்னர் சீர்சய மிகுத்திடை விடாத வொலியும் | | மறைவ லாளர்மறை நாள்வயின் வழாதவொலியும் இன்ன மாகடன் முழங்கிஎழு கின்ற வொலியென்று இம்பர் உம்பரறி யாதபரி செங்கு மிகவே. |
(பொ-நி.) சீர்சயம் மிகுத்து மன்னர் இடைவிடாத ஒலியும், மறைவலாளர் மறைவழாத ஒலியும், இன்னகடல் ஒலி என்று அறியாத பரிசு, மிக; (எ-று.) (வி-ம்.) சீர்சயம் மிகுத்து - குலோத்துங்கனுடைய சிறப்பையும் வெற்றியையும் மிகுத்து. மறைவலாளர் - அந்தணர். நாள்வயின் மறை என இயைக்க; நாள்தோறும் ஓதத்தக்க மறை என்க. இன்னமாகடல்- இவ்வகையான பெரிய கடல்தான். இம்பர் - இவ்வுலகத்தார், உம்பர் - விண்ணுலகத்தார். பரிசு-தன்மை. (53) |