ஏழிசை வல்லபி உடனிருந்தமை 285. | வாழி சோழகுல சேகரன் வகுத்த இசையின் | | மதுர வாரியென லாகுமிசை மாத ரிதெனா ஏழு பாருலகொ டேழிசை வளர்க்க வுரியாள் யானை மீதுபிரி யாதுட னிருந்து வரவே. |
(பொ-நி.) இசையின் மதுரவாரி எனலாகும் இசை மாது, ஏழிசை வளர்க்க உரியாள் அரிது எனா உடன் இருந்துவர; (எ-று.) (வி-ம்.) சோழகுலசேகரன் - குலோத்துங்கன். இ்சையின் மதுரவாரி- இசை இன்பக்கடல். இசைமாது: ஏழிசை வல்லபி - அரிது எனா - பிரிந்திருத்தல் அரிதென்று. ஏழுபார் உலகு. உலகின்கண் உள்ள ஏழு தீவுகளையும். அரிதெனா பிரியாது என இயைக்க. மூன்றாம் மனைவியாகிய இவள் பிரியாது உடனிருந்தாள் என்க. (54) |