தியாகவல்லி உடன் சென்றமை

286.பொன்னின் மாலைமலர் மாலைபணி மாறி உடனே
    புவனி காவலர்கள் தேவியர்கள் சூழ்பி டிவரச்
சென்னி யாணையுடன் ஆணையைந டத்தும் உரிமைத்
   தியாக வல்லிநிறை செல்விஉடன் மல்கி வரவே.

     (பொ-நி.)  காவலர்கள்  தேவியர்கள்  பணிமாறி  சூழ்பிடி  (மேல்)
வர. தியாகவல்லி உடன் மல்கிவர; (எ-று.)

    
 (வி-ம்.)   பொன்னின்   மாலை   -   பொன்னாலான    மாலை.
பணிமாறி  -   தியாகவல்லிக்கு  அணிவித்துத்தொண்டு  பூண்டு.   பிடி -
பெண்யானை.  புவனி  - உலகம்.  பிடிவர:  ஏழாவதன் தொகை. சென்னி-குலோத்துங்கன்.  ஆணையை  -  தன்ஆணையையும்.    நிறைசெல்வி -
குறைவற்ற    செல்வத்தையுடையாள்.   தியாகவல்லியாகிய   சிறைசெல்வி என்க.  உடன் - குலோத்துங்கன் பக்கத்தே. மல்கல்-நெருங்கல்.
                                                       (55)