அரசரும் பெண்களும் சூழ்ந்து வந்தமை 287. | பிடியின் மேல்வரு பிடிக்குல மநேக மெனவே | | பெய்வ ளைக்கைமட மாதர்பிடி மீதின் வரவே முடியின் மேன்முடி நிரைத்துவரு கின்ற தெனவே முறைசெய் மன்னவர்கள் பொற்குடை கவித்துவரவே. |
(பொ-நி.) மடமாதர் பிடிமீதின் வர, மன்னவர்கள் பொற்குடை கவித்துவர; (எ-று.) (வி-ம்.) பிடி - பெண்யானை. குலம் - கூட்டம். பெய்வளை கை - வளையலணிந்த கைகளையுடைய. மடமாதர்-அரசபரிவார மகளிர். முடி- மகுடம். பொற்குடை-பொன்னாலாகிய குடை. (56) |